தோகாவில் நடைபெற்ற ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை அனுபமா ராமசந்திரன் ஹாங்காங்கின் ஆன் யியை 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
23 வயதான சென்னையைச் சேர்ந்த அனுபமா, உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்வீராங்கனையாகும்.