போட்ஸ்வானா அதிபருடன் குடியரசுத் தலைவர் முர்மு சந்திப்பு: இந்தியாவுக்கு 8 சிவிங்கிப் புலிகள் வழங்கல்

Date:

போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 8 சிவிங்கிப் புலிகளை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

3 நாள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மோக்கோலோடி தேசியப் பூங்காவுக்குச் சென்றார். அவருடன் போட்ஸ்வானா அதிபரும் இணைந்திருந்தார். பூங்கா முழுவதும் இருவரும் பாதுகாப்பு வாகனத்தில் சுற்றிப் பார்வையிட்டனர்.

அப்போது, இப்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 8 சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்காக அதிபர் துமா கிடியான் போக்கோ ஒப்படைத்தார். இவை விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளன. களஹாரி வனப்பகுதியில் இருந்து இவை மோக்கோலோடி தேசியப் பூங்காவுக்கு மாற்றப்பட்டவை. 3,700 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, போட்ஸ்வானாவின் முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

மோக்கோலோடி பூங்காவில் காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, பல்வேறு ஆப்பிரிக்க பறவைகள் மற்றும் ஊர்வனங்கள் உள்ளிட்ட பல விலங்குகள் வாழ்கின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தரப்புகள் தெரிவித்தன.

இதற்கு முன், 2022-ஆம் ஆண்டு நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகளும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகளும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன என்பது நினைவுறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில்...

நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்பவில்லை: ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா தனது சமீபத்திய பேட்டியில், சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை தமிழ்...

மூடிஸ் ஆய்வில்: இந்திய பொருளாதாரம் 2027 வரை 6.5% வளர்ச்சி பெறும்

மூடிஸ் நிறுவனம் வெளியிட்ட குளோபல் மேக்ரோ அவுட்லுக் 2026-27 அறிக்கையில் இந்திய...

காங்கிரஸ் பூத் அளவில் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்: திக்விஜய் சிங்

பூத் மட்டத்திலான மக்கள் தொடர்பை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்த...