தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளாகப் படங்களை தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் நின்ற படங்களுக்கு உதவியும் செய்து வந்த தயாரிப்பாளர் மறைந்த எஸ். செயின் ராஜ் ஜெயின் நடத்தி வந்த மிஸ்ரி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை அவரது மகன் ரஜினி கிஷன் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
ரஜினி கிஷன் ஹீரோவாக நடித்தும் தயாரித்தும் இருக்கும் அவரது மூன்றாவது திரைப்படம் ‘ரஜினி கேங்’ விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படம், ‘கனா காணும் காலங்கள்’ இணையத் தொடரால் பிரபலமான ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள கலகலப்பான ஹாரர் காமெடி படமாகும். ரஜினி கிஷனுக்கு ஜோடியாக தீவிகா நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டு, படக்குழுவை வாழ்த்தினர்.
இந்த படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் கூறுகையில்,
“ஊரைவிட்டு ஓடி திருமணம் செய்ய நினைக்கும் காதல் ஜோடி, எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்களே இந்தப் படத்தின் மையக்கரு”
என்று தெரிவித்துள்ளார்.