‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ படங்களை இயக்கிய எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்கும் திகில்–காமெடி படம் ‘ரஜினி கேங்’ உருவாகியுள்ளது. மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசையும் ட்ரெய்லரும் அண்மையில் வெளியிடப்பட்டன.
விழாவில் பேசிய ரஜினி கிஷன் கூறியதாவது:
“இது எனது மூன்றாவது படம். பெரிய ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடிப்பது எனது கனவு. அதற்காகவே நல்ல கதையைத் தேர்வு செய்ய முயன்றேன். ரமேஷ் பாரதி மூன்று கதைகளைச் சொன்னார்; அவரின் ஆலோசனையின் பேரில் காமெடி கலந்த இந்த கதையைத் தேர்வு செய்தேன்.
முதலில் நாமே தயாரித்து நடிக்க வேண்டுமா என்று யோசித்தாலும், பின்னர் தயாரிப்பை நாமே மேற்கொள்ள முடிவு செய்தோம். பெரிய நடிகர்களை எல்லாம் ஒப்பந்தம் செய்துவிட்டோம்; ஆனால் ஹீரோயினை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலரை அணுகினோம், யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் திவிகா இந்த படத்தில் நடிக்க இணைந்தது மகிழ்ச்சி. என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. முனீஷ்காந்தும் என் நடிப்பைப் பாராட்டினார்.”