சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 13) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
காலை நேரத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.11,800-க்கும், ஒரு பவுன் ரூ.94,400-க்கும் விற்பனையானது.
ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் விலை உயர்ந்தது. மாலை நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.100 மேலும் உயர்ந்துள்ளது. இதனால், தங்கத்தின் தற்போதைய விலை ஒரு கிராமுக்கு ரூ.11,900, ஒரு பவுனுக்கு ரூ.95,200 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி, இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையிலும் சிறிய ஏற்றம் பதிவாகியுள்ளது. காலை ரூ.9 உயர்ந்திருந்த வெள்ளி, தற்போது மேலும் ரூ.1 கூடியுள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ரூ.183 என்றும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,83,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.