“அமெரிக்காவுக்கு வந்து பயிற்சி அளித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்புங்கள்!” — ட்ரம்பின் புதிய H-1B விசா பிளான்

Date:

அமெரிக்க வேலைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை முழுமையாக நம்பும் பழக்கத்தை குறைத்து, அமெரிக்கர்களுக்கே மேம்பட்ட தொழில்திறன்களை வழங்க புதிய வடிவிலான H-1B விசா திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புதிய H-1B விசா அணுகுமுறை, திறமையான வெளிநாட்டு நிபுணர்களை தற்காலிகமாக அமெரிக்காவுக்கு அழைத்து வந்து, அங்குள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு, பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

“இது அமெரிக்க உற்பத்தி திறனை மீட்டெடுக்கும் அறிவு பரிமாற்ற (knowledge transfer) முயற்சியாகும்,”

என பெசென்ட் விளக்கம் அளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

20 முதல் 30 ஆண்டுகளாக துல்லியமான உற்பத்தி (precision manufacturing) பணிகளை அமெரிக்காவில் நாம் செய்து வரவில்லை. இப்போது கப்பல் கட்டுமானம் மற்றும் செமி கண்டக்டர் தொழில்கள் ஆகியவற்றை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதே நோக்கம். இதற்காக அரிசோனாவில் பெரிய அளவிலான உற்பத்தி வசதிகள் உருவாக்கப்படவிருக்கின்றன.

அதற்காக திறமையான வெளிநாட்டு நிபுணர்களை மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு H-1B விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைப்போம். அவர்கள் இங்குள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு தங்கள் நாடுகளுக்குத் திரும்புவார்கள். அதன் பின்னர் அமெரிக்க தொழிலாளர்களே அந்தப் பொறுப்புகளை ஏற்க முடியும்,” என்றார்.

பெசென்ட் மேலும் தெரிவித்ததாவது, “H-1B விசா திட்டத்தின் இந்த புதிய மாற்றம், முக்கியமான தொழில்களை மீண்டும் அமெரிக்காவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கும், வெளிநாட்டு இறக்குமதிகளை நம்பியிருப்பதை குறைப்பதற்குமான முயற்சியாகும். அதேசமயம், அமெரிக்க குடும்பங்கள் வலுவான வர்த்தகக் கொள்கையால் பெறும் நன்மைகளை உணர, அதிபர் 2,000 டாலர் டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளார்,” என்றார்.

ட்ரம்ப்பின் இந்த புதிய H-1B திட்டம், வெளிநாட்டு திறமைகளை உள்வாங்கும் விதத்தை மாற்றி அமைத்து, அமெரிக்க தொழில்துறை சுயமறுசீரமைப்பை நோக்கிய முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி திடீர் விலகல் — உருக்கமான விளக்கம்!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’...

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால் அமைதியாக இருக்கமாட்டோம்!” — தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால்,...

உயிர்பலி வாங்கும் திருச்சி சஞ்சீவி நகர் சிக்னல் — சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல்!

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை எதிர்த்து, உடனடியாக...

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக போர் விமானம் — புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று (நவம்பர் 13) பிற்பகல் சிறிய...