தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை செய்யும் நடிகை பாக்யஸ்ரீ போர்சே, துல்கர் சல்மானை “உண்மையான நடிப்பு சக்கரவர்த்தி” எனப் பாராட்டியுள்ளார்.
பாக்யஸ்ரீ, துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார். மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படம் நாளை வெளியாகிறது.
திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பாக்யஸ்ரீ போர்சே தெரிவித்துள்ளார்:
“என்னை நம்பி, இப்படம் வாய்ப்பளித்த இயக்குநர் செல்வமணி செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவர் எனது முதல் ஆசிரியர், இயக்குநர்.
நடிகர் ராணா முதல் நாளிலிருந்தே எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்தப் பயணத்தில் அவரை வழிகாட்டியாகக் கொண்டிருப்பது எனக்குப் பெரும் அதிர்ஷ்டம். அவரின் ஊக்கமின்றி நான் இப்படத்தில் சிறப்பாக நடிக்க முடியாது.
துல்கர் சல்மான் ஒரு உண்மையான ‘நடிப்பு சக்கரவர்த்தி’. அவருடன் நடித்த அனுபவம் எனக்கு மறக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி, நேர்த்தியான நடிப்பு – எல்லாமே எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்.
இதுவரை எனை ஒரு கமர்ஷியல் நடிகை என்றே அழைத்துள்ளனர். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு மக்கள் என்னை ஒரு ‘சிறந்த நடிகை’ என்று கூறுவார்கள் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.