டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மொத்த விலை சந்தை நாட்டின் மிகப் பெரிய வணிக மையங்களில் ஒன்றாகும். தினமும் சுமார் 4 லட்சம் பேர் வருகை தரும் இந்த சந்தையில், வழக்கமாக ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்நிலையில், செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சாந்தினி சவுக் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன நுழைவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் வாடிக்கையாளர் வருகை கணிசமாக குறைந்து, ஒரு நாளிலேயே ரூ.400 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை தற்காலிகமானது என்றும், பாதுகாப்பு நிலைமை சீராகியவுடன் வாடிக்கையாளர்கள் மீண்டும் திரும்புவார்கள் என்றும், அந்தத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பிரவீன் காந்தல்வால் தெரிவித்தார்.