நாட்டின் சில்லறைப் பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 0.25 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 1.54% ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணிசமாகக் குறைக்கப்பட்டதுடன், உணவுப் பொருட்களின் விலைகளும் சரிவடைந்தன.
இதன் விளைவாக அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 0.25% ஆக குறைந்துள்ளது. இது சமீப காலங்களில் பதிவான மிகக் குறைந்த பணவீக்க வீதமாகும்.
மேலும், கடந்த நான்கு மாதங்களாக பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்காகக் குறிப்பிடப்பட்ட 4 சதவீத அளவிற்கு கீழேதான் நிலைத்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.