ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ரானா, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உள்ளிட்ட 29 பேருக்கு ஹைதராபாத் சிஐடி நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது.
இதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், சில வங்கி கணக்கு விவரங்களையும் அவர் சமர்ப்பித்தார்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ் கூறியதாவது:
“2016-ல் நான் ஒரு செயலிக்காக விளம்பரம் செய்தேன். பின்னர் அந்த நிறுவனம் 2017-ல் ஆன்லைன் சூதாட்ட செயலியாக மாறியது. இதை அறிந்ததும் நான் உடனே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். எனவே பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்,” என தெரிவித்தார்.