போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, வரவிருக்கும் 2026 பிஃபா உலகக் கோப்பை தான் தனது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
“நிச்சயம் 2026 உலகக் கோப்பை எனது கடைசி தொடராகும். அப்போது நான் 41 வயதை எட்டுவேன். அது எனது வாழ்க்கையின் சரியான முடிவு நேரமாக இருக்கும். என் ஆட்டத்தின் தரம் மற்றும் உடல் நிலையைப் பொறுத்தே ஓய்வு பெறுவேன். அது அடுத்த ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளில் நடக்கலாம்,” என ரொனால்டோ கூறினார்.
40 வயதான ரொனால்டோ இதுவரை சர்வதேச மற்றும் கிளப் அணிகளுக்காக 950 கோல்கள் அடித்துள்ளார். 5 முறை Ballon d’Or விருதை வென்ற அவர், 2006-ம் ஆண்டிலிருந்து உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகிறார். தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக விளையாடும் ரொனால்டோ, அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ நாடுகளில் நடைபெறும் 2026 உலகக் கோப்பையில் பங்கேற்க போர்ச்சுகல் தகுதி பெறும் நம்பிக்கையில் உள்ளார்.