தேசிய கார்டிங்கில் 9 வயது அர்ஷி சாதனை — சாம்பியன் பட்டம் வென்ற சிறுமி!
பெங்களூருவில் உள்ள மீகோ கார்டோபியா சர்க்யூட்டில் நடைபெற்ற எஃப்எம்எஸ்சிஐ இந்தியன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 9 வயது சிறுமி அர்ஷி குப்தா அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்து வரும் அர்ஷி, தன்னுடைய திறமையான ஓட்டத்தால் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
தேசிய கார்டிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையையும் அர்ஷி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியால் சிறுமிகளும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக மோட்டார் விளையாட்டில் திறமை வெளிப்படுத்த முடியும் என்பதை அர்ஷி நிரூபித்துள்ளார்.