எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் சாம்ராட் ராணா தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
ஆண்கள் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ராணா 243.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.
சீன வீரர் ஹூஹை 243.3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதே பிரிவில் இந்தியாவின் வருண் தோமர் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்த சாதனையால் இந்திய அணி உலக துப்பாக்கி சுடுதல் அரங்கில் தன்னுடைய வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது.