அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் கூட்டணியில் ‘அன்கில்_123’
சாம் ஆண்டன் இயக்கத்தில் அனுராக் கஷ்யாப் நடிக்கும் புதிய தமிழ் படம் ‘அன்கில்_123’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சாம் ஆண்டன் இயக்கத்தில், பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் கஷ்யாப் தமிழில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘அன்கில்_123’ எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
போஸ்டர் மற்றும் அனுராக் கஷ்யாப்பின் தோற்றத்தைப் பார்த்தவுடன், இப்படம் ஒரு சைக்கோ திரில்லர் வகை கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் ஊகிக்கின்றனர்.
படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்த், இசையை ஜெரால்ட், எடிட்டிங்கை நேஷ் மேற்கொள்கிறார்கள். அனுராக் கஷ்யாப் உடன் இணைந்து நடிக்கவுள்ள நடிகர்கள் தற்போது தேர்வு செய்யப்படுகின்றனர். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சாம் ஆண்டன் கடைசியாக ‘டெடி’ படத்தின் தெலுங்கு ரீமேக் ‘பட்டி’ படத்தை இயக்கியிருந்தார். அதற்கு முன் 2022ஆம் ஆண்டு அதர்வா நடித்த ‘ட்ரிக்கர்’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது, ‘அன்கில்_123’ மூலம் அவர் மீண்டும் தமிழ்த் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.