பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் ஆட்சியை அமைக்கும் எனத் தெளிவுபடுத்துகின்றன.
ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், என்டிஏ 140-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் எனவும், எதிர்க்கட்சியான மெகா கூட்டணி சுமார் 90-க்கும் மேற்பட்ட இடங்களை பெறும் எனவும் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நிறைவடைந்தது.
முதற்கட்டத்தில் 65.08% வாக்குகளும், இரண்டாம் கட்டத்தில் 67.14% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கருத்துக் கணிப்பு முடிவுகள்:
- தைனிக் பாஸ்கர்: என்டிஏ 145–160, மெகா கூட்டணி 73–91
- மாட்ரிஸ்: என்டிஏ 147–167, மெகா கூட்டணி 70–90
- பீப்பிள்ஸ் இன்சைட்: என்டிஏ 133–148, மெகா கூட்டணி 87–102
- பீப்பிள்ஸ் பல்ஸ்: என்டிஏ 133–159, மெகா கூட்டணி 75–101
- என்டிடிவி: என்டிஏ 152, மெகா கூட்டணி 84
மூன்றாவது சக்தியாக எதிர்பார்க்கப்பட்ட ஜன சுராஜ் கட்சி, குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறவில்லை எனவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
என்டிஏ கூட்டணி கட்சிகள்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடிஉ), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா உள்ளிட்டவை.
பாஜக மற்றும் ஜேடிஉ தலா 101 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 28 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
மெகா கூட்டணி கட்சிகள்: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், சிபிஐ(எம்எல்), விகஷீல் இன்சான் கட்சி, சிபிஐ, சிபிஎம், இந்தியன் இன்குலுசிவ் கட்சி மற்றும் ஜனசக்தி ஜனதா தளம் ஆகியவை இணைந்து போட்டியிட்டன.
இந்த தேர்தலில் மோடி, அமித் ஷா, நிதிஷ் குமார், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.