மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
அணியின் டெவன் கான்வே 56, டிம் ராபின்சன் 23, ரச்சின் ரவீந்திரா 26, டேரில் மிட்செல் 41, மைக்கேல் பிரேஸ்வெல் 11 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 178 ரன்கள் இலக்குடன் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 19.5 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் 49, அலிக் அத்தனாஸ் 31, அகீம் ஆகஸ்ட் 24 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக பங்களிக்க முடியவில்லை.
இதன் மூலம் நியூஸிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.