‘
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ சிறுகதை அடிப்படையில் உருவான ‘அங்கம்மாள்’ திரைப்படம் நவம்பர் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், கீதா கைலாசம் அங்கம்மாள் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரண், பரணி, முல்லை அரசி, தென்றல் ரகுநாதன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஸ்டோன்பெஞ்ச், என்ஜாய் பிலிம்ஸ், பிரோ மூவி ஸ்டேஷன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
படம் குறித்து கீதா கைலாசம் கூறியதாவது:
“இது ஒரு அம்மா–மகன் உறவு மையப்படுத்திய கதை. இந்த கதாபாத்திரத்திற்காக சுருட்டு மற்றும் பீடி பிடிப்பதற்கே கூட பயிற்சி எடுத்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது, ஆனால் படப்பிடிப்பு நேரங்களில் மட்டுமே அதை பயன்படுத்தினேன்.
ரவிக்கை அணியாமல் நடிப்பது, சுருட்டு பிடித்தபடி டிவிஎஸ் 50 ஓட்டுவது போன்ற காட்சிகள் சவாலாக இருந்தன. நெல்லை பேச்சு வழக்கில் பேச முயன்றேன். படப்பிடிப்பு நடந்த பத்மநேரி கிராமத்தில் உள்ள மக்களுடன் பழகியது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது,” என்றார்.