உலகக் கோப்பை செஸ்: நான்காம் சுற்றுக்கு முன்னேறிய கார்த்திக் வெங்கட்ராமன்
கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய கிராண்ட்மாஸ்டர் கார்த்திக் வெங்கட்ராமன் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற 3-வது சுற்று டை-பிரேக்கர் ஆட்டத்தில், கார்த்திக், ரொமேனிய வீரர் போக்டான் டேனியல் டீக்கை 43 நகர்த்தல்களில் வெற்றி கொண்டார். இந்த சாதனையால், அவர் 4-வது சுற்றுக்குச் சென்றார்.
இதே நேரத்தில், மற்ற இந்திய வீரர்கள் விதித் குஜ்ராத்தி மற்றும் எஸ்.எல். நாராயணன் தங்கள் ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். விதித், அமெரிக்காவின் சாம் ஷாங்லாண்ட்ிடம், நாராயணன், சீனாவின் யூ யாங்கிிடம் தோற்றனர்.