ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் ராதிகா சுதந்திரா சீலன் 32 நிமிடங்களில் நியூஸிலாந்தின் எம்மா மெர்சனை 11-9, 11-7, 11-6 செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் ராதிகா சீலன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார், மேலும் இந்தியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார்.