சுல்தான் ஆஃப் ஜோகூர் ஜூனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
ஆறு அணிகள் பங்கேற்ற சுல்தான் ஆஃப் ஜோகூர் ஜூனியர் ஹாக்கி தொடரில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை நேற்று மலேசியாவுக்கு எதிராக விளையாடியது. அந்த ஆட்டத்தில் இந்தியா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணிக்காக 22வது நிமிடத்தில் குர்ஜோத் சிங் முதல் கோலை அடிக்க, 48வது நிமிடத்தில் சவுரப் ஆனந்த் குஷ்வாஹா இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
இந்த வெற்றியால், இந்தியா மொத்தம் 10 புள்ளிகளுடன் அட்டவணையில் இரண்டாம் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதுவரை 5 ஆட்டங்களில் இந்தியா 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், கடந்த 12 தொடர்களில் இந்தியா 8வது முறையாக இறுதிப்போட்டியில் கால்பதித்துள்ளது.
இன்று (18ஆம் தேதி) நடைபெறும் இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.