20 நிமிடங்களில் மூன்று முறை அடிபட்டார் ரிஷப் பண்ட் – மோர்க்கியின் பவுன்சர்கள் ‘முட்டி’ தாக்கம்!
இந்தியா ‘ஏ’ அணியும் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியும் மோதிய டெஸ்ட் தொடரில் இந்தியா அணி வெற்றி பெற்றது. ஆனால், அதே சமயம் கேப்டன் ரிஷப் பண்ட் கடுமையான சோதனையைச் சந்தித்தார். வெறும் 20 நிமிடங்களில் மூன்று முறை தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷீபோ மோர்க்கியின் பந்துகள் அவரை தாக்கியதால் அவர் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது காயமடைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மைதானம் அடைந்த பண்ட், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஆடி, அதிரடி தொடக்கத்தைக் காட்டினார் — வந்தவுடனேயே 4, 4, 6 என அடித்தார். ஆனால் அதற்குள் மோர்க்கியின் பவுன்சர்கள் அவரை திணறச் செய்தன.
முதல் தாக்குதல்:
ரிவர்ஸ் ரேம்ப் ஷாட் ஆட முயன்றபோது பந்து நேராக ஹெல்மெட்டில் பட்டது. வேகத்தால் பேலன்ஸ் இழந்த பண்ட் தரையில் விழுந்தார். உடனே மருத்துவர் வந்து மூளை அதிர்ச்சி சோதனை செய்தார்.
இரண்டாவது தாக்குதல்:
மீண்டும் மோர்க்கி குறுகிய நீளப் பந்தை வீச, அது இடது முழங்கையில் மோதி கடும் வலியை ஏற்படுத்தியது. பெயின் கில்லர் எடுத்த பிறகே அவர் தொடர்ந்தார்.
மூன்றாவது தாக்குதல்:
சில நிமிடங்களிலேயே இன்னொரு வேகப்பந்து அப்டமன் பகுதியில் நேராகப் பட்டது. இதுவே மூன்றாவது “அடி”. இதன் பிறகு முழங்கையில் ஏற்பட்ட வலி தாங்காமல், பண்ட் பெவிலியனுக்கே திரும்பினார்.
பின்னர் சிறிது ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் களமிறங்கி அரைசதம் பூர்த்தி செய்தார்.
இந்த ஆட்டம் முழுவதும் பண்ட்டை மோர்க்கி கடுமையாக சோதித்தார் என்பதால், வரவிருக்கும் டெஸ்ட் தொடரிலும் இதே பவுன்சர் தந்திரம் எதிராக அவருக்கு சவாலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், இந்தியா அணியில் அவரது நிலையை அச்சுறுத்துபவர் துருவ் ஜுரெல், சமீபத்திய டெஸ்ட் தொடரில் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். எனவே, பண்ட் தற்போது காயங்களும், போட்டியாளர்களும் என இரட்டை அழுத்தத்திலிருக்கிறார்.