‘டிசி’ படத்தில் முக்கிய வேடத்தில் சஞ்சனா — அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் உறுதி
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் ‘டிசி’ திரைப்படத்தில், நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது, 2வது கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், சஞ்சனாவின் காட்சிகள் அடுத்த கட்டத்தில் படமாக்கப்படவுள்ளன.
இந்தப் படத்தில் வாமிகா காபி நாயகியாக நடிக்கிறார். படம் முழுக்க ஆக்ஷன் கலந்த காதல் கதை என கூறப்படுகிறது.
இசை – அனிருத், ஒளிப்பதிவு – முகேஷ், தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்.
‘டிசி’ படப்பிடிப்பு நிறைவடைந்த பின், லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த இயக்கத் திட்டத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார். அந்தப் படத்தின் நாயகன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.