“அனுபவமே எங்கள் பலம்” — ஆஷஸ் தொடரை முன்வைத்து ஜோஷ் ஹேசில்வுட்

Date:

“அனுபவமே எங்கள் பலம்” — ஆஷஸ் தொடரை முன்வைத்து ஜோஷ் ஹேசில்வுட்

வரும் நவம்பர் 21-ம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் 14 பேர் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பந்து வீச்சாளர்களான நேதன் லயன் (38), ஹேசில்வுட் (34), மிட்செல் ஸ்டார்க் (35), ஸ்காட் போலண்ட் (36) ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஹேசில்வுட் கூறியதாவது:

அனுபவமே எங்கள் பிரதான பலம் என நான் நம்புகிறேன். இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே அல்ல, அனைத்து வடிவங்களுக்கும் பொருந்தும். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் ஒரே அணியாக விளையாடி பல்வேறு சூழல்களிலிருந்து நிறைய கற்றுள்ளோம். களத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். ஒவ்வொருவரும் தங்கள் பங்கினை நன்கு அறிந்துள்ளனர்,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

“அதிக வயதுள்ள வீரர்கள் கொண்ட அணியாக மாறும் காலம் ஒருநாள் வரும்; ஆனால், அது இன்னும் எட்டப்படவில்லை என நம்புகிறேன்,” என தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனைக்கு ஹேசில்வுட் இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...