சித்தார்தின் புதிய படம் ‘ரெளடி & கோ’ — டைட்டில் லுக் வெளியீடு
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்துக்கு ‘ரெளடி & கோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக்-ஐ தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், சித்தார்த் நடித்த ‘டக்கர்’ திரைப்படத்திற்குப் பிறகு அவர்களது இரண்டாவது கூட்டணி ஆகும்.
படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்ததாவது — “அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ‘ரெளடி & கோ’ வெளியாகும்” எனக் கூறியுள்ளது. இதில் சித்தார்த் உடன் நடித்துள்ள மற்ற நடிகர்கள் பற்றிய தகவலை தற்போது ரகசியமாக வைத்துள்ளனர்.
இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராகவும், ரேவா இசையமைப்பாளராகவும், பிரதீப் இ. ராகவ் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதே இயக்குநருடன் சித்தார்த் முன்பு இணைந்திருந்த ‘சைத்தான் கே பட்சா’ திரைப்படம் இன்னும் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே படமே தலைப்பை மாற்றி ‘ரெளடி & கோ’ ஆகி இருக்குமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.