டென்மார்க் ஓபனில் சாட்விக்–ஷிராக் ஜோடி அரையிறுதிக்கு
டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடர் டென்மார்க்கின் ஓடென்சே நகரில் நடைபெற்று வருகிறது.
இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீரர்கள் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் முகமது ரியான் அர்டியான்டோ–ரஹ்மத் ஹிதாயத் ஜோடியை எதிர்கொண்டனர்.
65 நிமிடங்கள் நீடித்த கடுமையான போட்டியில், சாட்விக்–ஷிராக் ஜோடி 21–15, 18–21, 21–16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.