சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழகம் அதிரடி சாதனை!
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூரில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகம் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழகம், புதுச்சேரி அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தமிழகம் 15-0 என்ற கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.
தமிழக அணிக்காக பி. டுடே 4 கோல்கள் அடித்து சிறப்பாக விளங்கினார். சவுவிக் ஹால்டர் 3 கோல்களும், முகமது ரிஹான் 2 கோல்களும் அடித்து அணிக்கு பலம் சேர்த்தனர். மேலும் குஞ்சாபு நிகில் தேஜ், ஜாக்ரோமாரியோ, முகமது அஸ்லான் லாண்ட்ஜ், ஆர். ரோஷன், அபிட்நேகோ, கே. ரோஷன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு பங்களித்தனர்.