ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி பெற்றனர்
கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற 3வது சுற்றின் முதல் ஆட்டத்தில், இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதீன் வோகிடோவ் மீது 30வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
அதேபோல், இந்தியாவின் மற்றொரு கிராண்ட் மாஸ்டரான பி. ஹரிகிருஷ்ணா, பெல்ஜியம் வீரர் டேனியல் தர்தாவுடன் மோதிய ஆட்டத்தில் 25வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், உலக சாம்பியனான இந்திய வீரர் டி. குகேஷ், ஜெர்மனியின் ஃபிரடெரிக் ஸ்வேன் எதிராக ஆடிய ஆட்டம் டிராவாக முடிந்தது.