தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு – வெள்ளி விலையில் மாற்றமில்லை
சென்னை: சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.11,300 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
அதேநேரத்தில், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.98,616 என பதிவானது.
இந்நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165 என்றும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,65,000 என்றும் நிலைபெற்றது.