தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெறும் இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தங்களின் முதல் இன்னிங்ஸை முடித்துள்ளன.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘ஏ’ அணி, 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு அனைத்துவீக்கெட்டுகளையும் இழந்தது. அணிக்காக துருவ் ஜூரெல் மிகச்சிறப்பாக 132 ரன்கள் அடித்தார்.
அதன்பின் பேட்டிங் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ஜோர்டான் ஹர்மான் (26), லெசெகோ செனோக்வானே (0), ஜுபைர் ஹம்சா (8), டெம்பா பவுமா (0), கானர் எஸ்டெர்ஹுய்சென் (0) உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விரைவில் பெவிலியனுக்குத் திரும்பினர்.
விக்கெட்கள் இடைவிடாமல் சரிந்தபோதும், கேப்டன் மார்க்வெஸ் அக்கர்மேன் தனக்கான பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றினார். அவர் 118 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் சேர்த்தார். கடைசி பேட்ஸ்மேனாக ஹர்ஷ் துபே பந்தில் அவுட் ஆனார். இதனால் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 47.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா ‘ஏ’ அணிக்காக:
- பிரசித் கிருஷ்ணா – 3 விக்கெட்
- முகமது சிராஜ் – 2 விக்கெட்
- ஆகாஷ் தீப் – 2 விக்கெட்
- குல்தீப் யாதவ் – 1 விக்கெட் எடுத்தனர்.
முதல் இன்னிங்சில் 34 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா ‘ஏ’ அணி, இரண்டாவது இன்னிங்சில் 2வது நாள் முடிவில் 24 ஓவர்களில் 3 விக்கெட்களுக்கு 78 ரன்கள் எடுத்தது.
அபிமன்யு ஈஸ்வரன் (0), தேவ்தத் படிக்கல் (24), சாய் சுதர்சன் (23) ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் (26) மற்றும் குல்தீப் யாதவ் (0) களத்தில் நீடித்து விளையாடி வருகின்றனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.