மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்

Date:

மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா உற்சவம் மிகுந்த பக்தி உற்சாகத்துடன் தொடங்கியது.

மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்து, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது மரபாகும். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு, நேற்று மயிலாடுதுறை கோயில்களில் துலா உற்சவத் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

மாயூரநாதர் கோயிலில், ரிஷப கொடி கோயிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்து, கோயில் கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளிய பின், திருவாவடுதுறை ஆதீன கட்டளை சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்தில் கொடி ஏற்றி, மகா தீபாராதனை காணப்பட்டது.

தொடர்ந்து கோயிலின் நான்கு பிரகாரங்களிலும் கொடியேற்றம் நடந்தது. இதில் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி உள்ளிட்ட பல பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், வதானேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் துலா உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. மேலும், தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் மற்றும் மார்க்கெட் காசி விஸ்வநாதர் கோயில்களிலும் துலா உற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் –...

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம்...

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! ஹாங்காங் நகரில் நடைபெற்று...

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம்

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம் துல்கர் சல்மான், பாக்ய போர்சே,...