“எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்” – அஜித் விளக்கம்
சமீபத்தில் அளித்த தனது பேட்டியை நடிகர் விஜய்க்கு எதிராக திரித்துக் காட்டுவதை நிறுத்துமாறு நடிகர் அஜித் ரசிகர்களையும் ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கரூர் நிகழ்வைச் சுற்றி நடந்த பேட்டியில், “அந்தச் சம்பவத்துக்கு ஒருவரே காரணம் அல்ல; அனைவருக்கும் பொறுப்பு உண்டு” என்று கூறியிருந்தார் அஜித். இதனை சில இணையவாசிகள் விஜய்க்கு எதிரான கருத்தாகப் புரிந்து பகிர்ந்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்த அஜித், “எப்போதுமே விஜய்க்கு நல்லதே நடக்க வேண்டும் என விரும்புகிறேன். எனது பேட்டியை அவருக்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள். கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் மட்டுமே. இதுபோன்ற நிகழ்வுகள் ஆந்திரா, பெங்களூரு, வெளிநாடுகளிலும் நடந்துள்ளன,” என்று கூறினார்.
மேலும், “என் வம்சாவளி குறித்து சிலர் தவறாக பேசுகிறார்கள். எனை பிடிக்காதவர்கள் ‘வேற்று மொழி பேசுபவர்’ எனச் சொல்கிறார்கள். ஆனால் ஒருநாள் அதே மக்கள் என்னை தமிழன் என்று பெருமையாகச் சொல்வார்கள். கார் பந்தயத்தில் சாதனை படைத்து மாநிலம், நாடு பெருமை படும் அளவுக்கு உழைக்கப் போகிறேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.
அதோடு, “முதலில் குடும்பத்தை கவனியுங்கள். என் படங்களை திரையரங்கில் பார்க்க விரும்பினால் பாருங்கள்; ஆனால் நான் யாரையும் வற்புறுத்த மாட்டேன். அரசியலிலும் வாக்கு கேட்க மாட்டேன் — வாக்களிப்பது குடிமகனின் கடமை. மோட்டார் விளையாட்டுகளை ஊக்குவியுங்கள்; நான் அளிக்கும் பேட்டிகள் அதற்காகத்தான். எனது படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை — அவை மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டன,” என்று அஜித் தெரிவித்தார்.