ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 நிதி தேர்தல் முடிவை பாதித்ததாக கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:
“தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே சுமார் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் எதற்காக தடுக்கவில்லை? இது நேரடியான வாக்கு கவர்ச்சி, வாக்கு திருட்டே.
தேர்தல் காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் பணம் பகிர்ந்தபோதும், ஆணையம் ஊமைபார்வையாளராகவே இருந்தது. ஆளும் கட்சியுடன் சேர்ந்து அவர்கள் கண்மூடித்தனமாக நடந்துகொண்டனர்.
பணத்தின் பலம் இந்தத் தேர்தலில் மிகத் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது. பண விநியோகத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.