தங்கம் விலை மீண்டும் உயர்வு – பவுனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு
சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அக்டோபர் 17ஆம் தேதி தங்கம் விலை ரூ.97,600 ஆக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88,600 ஆக இருந்தது. அதன்பின் தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வுடன் மாறி வந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.90,560 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.140 அதிகரித்து ரூ.11,320 ஆகவும் விற்பனையாகியது.
24 காரட் தூய்தங்கம் ரூ.98,792 ஆக இருந்தது. அதேபோல, வெள்ளி விலையும் உயர்வு கண்டது — ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.165 ஆனது; கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,000 அதிகரித்து ரூ.1.65 லட்சமாக விற்பனையாகியது.