பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்திற்கு விற்பனை

Date:

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்திற்கு விற்பனை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் மீனவர் வலையில் இரண்டு அரிய வகை கூறல் மீன்கள் சிக்கி, ரூ. 1,65,600-க்கு விற்பனையாகியுள்ளன.

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து வியாழக்கிழமை இரவு 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். வெள்ளிக்கிழமை காலை கரை திரும்பியபோது, ஒரு வலையில் 22 கிலோ மற்றும் 24 கிலோ எடையிலான கூறல் மீன்கள் சிக்கியிருந்தன. மொத்தம் 46 கிலோ எடையுள்ள இந்த மீன்கள், கிலோவுக்கு ரூ.3,600 வீதம் ஏலத்தில் விற்கப்பட்டன.

பாம்பன் மீனவர்கள் கூறுகையில்,

“கூறல் மீன் உணவுக்காகப் பயன்படுத்தப்படாது. அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் காற்றுப்பை (fish maw) மிகுந்த மதிப்புடையது. இது பீர், ஒயின், ஜெல்லி மிட்டாய் போன்ற பொருட்களில் சுவை மற்றும் நீண்டகால தாங்குதன்மையை அதிகரிக்கப் பயன்படுகிறது. மேலும், கிழக்கு ஆசிய நாடுகளில் இதனைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி...

போளூர் பகுதியில் மணல் கடத்தல் – திமுக நிர்வாகி மீது மக்கள் குற்றச்சாட்டு

போளூர் பகுதியில் மணல் கடத்தல் – திமுக நிர்வாகி மீது மக்கள்...

சபரிமலை பதினெட்டாம் படியில் சேதமும் கொள்ளையும் – பாஜக தலைவர் கடும் குற்றச்சாட்டு

சபரிமலை பதினெட்டாம் படியில் சேதமும் கொள்ளையும் – பாஜக தலைவர் கடும்...

வங்கதேச தேர்தல் களம்: பிரதமர் கனவுடன் நாடு திரும்பும் கலீதா ஜியாவின் மகன்

வங்கதேச தேர்தல் களம்: பிரதமர் கனவுடன் நாடு திரும்பும் கலீதா ஜியாவின்...