‘பரசுராமர்’ கதையில் நடிக்க விக்கி கவுஷல் — அசைவம், மதுவை கைவிட்டார்!
பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல், விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் கதையை அடிப்படையாகக் கொண்ட புதிய புராணத் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘மகாவதார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ‘ஸ்திரீ 2’ படத்தை இயக்கிய அமர் கவுஷிக் இயக்குகிறார். தற்போது திரைக்கதை பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்காக, VFX (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) பணிகளுக்கு மட்டும் சுமார் ஆறு மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக விக்கி கவுஷலும் இயக்குநர் அமர் கவுஷிக்கும் அசைவ உணவு மற்றும் மது பழக்கத்தை முழுமையாக கைவிட்டுள்ளனர் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘மகாவதார்’ திரைப்படத்தின் பூஜை விழா அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.