‘காவலன்’ செயலியால் ஊக்கமளிக்கப்பட்ட த்ரில்லர் படம் — ‘தி டிரெய்னர்’!
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய த்ரில்லர் படம் ‘தி டிரெய்னர்’. ஜூனியர் எம்.ஜி.ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே.ஆர்.எம். ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை டிரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நீலா தயாரிக்க, இயக்குநர் பி. வேல்மாணிக்கம் இயக்கியுள்ளார். அருள்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்திருக்க, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
படக்குழுவினரின் தகவலின்படி, “பெண்களின் பாதுகாப்பும் முன்னேற்றமும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு போலீசார் உருவாக்கிய ‘காவலன்’ செயலியிலிருந்து ஊக்கமெடுத்து, இந்த படம் உருவாகியுள்ளது,” என தெரிவித்துள்ளனர்.
நடிகர் காந்த், நாய் பயிற்சியாளராக இப்படத்தில் நடிக்கிறார்; அவருடன் ‘லீ’ என்ற நாய் முக்கிய கதாபாத்திரமாக வருகின்றது.
ஜூனியர் எம்.ஜி.ஆர், வில்லனாக நடித்துள்ளார். அவரின் செல்வாக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் மர்ம கும்பலைச் சுற்றியே கதை நகர்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஷாம், காந்தை குற்றவாளி என தவறாக எண்ணுகிறார். உண்மையை நிரூபிக்க காந்த் எடுக்கிற முயற்சிகள்தான் இப்படத்தின் திரைக்கதை என படக்குழு தெரிவித்துள்ளது.
படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.