மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி இணைகிறார்?

Date:

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி இணைகிறார்?

பிரபல இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை இயக்கியிருந்தார். சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை.

இப்போது, மணிரத்னம் காதல் கதையம்சம் கொண்ட புதிய திரைப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

மணிரத்னமும் விஜய் சேதுபதியும் இதற்கு முன் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தனர். தற்போது இணையும் புதிய படத்தில், ருக்மணி வசந்த் நாயகியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதே நேரத்தில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மற்றொரு படம் பற்றியும் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருவள்ளூர் : ரயில் வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

திருவள்ளூர் : ரயில் வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல் ஆந்திர மாநிலத்திலிருந்து...

ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்!

ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்! அமெரிக்க வெளியுறவுத் துறை அமல்படுத்தியுள்ள...

மீண்டும் வர்த்தக வழியாக மாறுமா பெட்ரா நகரம்?

மீண்டும் வர்த்தக வழியாக மாறுமா பெட்ரா நகரம்? ஜோர்டானில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு...

எடப்பாடி தொகுதியில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி தொகுதியில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி! சேலம்...