உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்

Date:

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்

நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணியினர் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 52 ரன்களில் வீழ்த்தி, முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது.

இந்த சந்திப்பில், இந்திய அணியினருடன் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இறுதி போட்டி சம்பந்தமாக அணியினருடன் உரையாடி, ஹர்மன்பிரீத் மற்றும் அமன்ஜோத் கவுர் பிடித்த முக்கிய கேட்ச் குறித்து பேசினார்.

வீராங்கனைகள் பிரதமர் மோடிக்கு ‘நமோ’ எழுத்து கொண்ட இந்திய அணியின் ஜெர்ஸி வழங்கி, அதில் அணியினர் அனைவரும் கையொப்பமிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...