‘ஆரோமலே’ படத்திற்கு சிம்பு சொன்ன மாற்றம்!

Date:

‘ஆரோமலே’ படத்திற்கு சிம்பு சொன்ன மாற்றம்!

கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் ‘ஆரோமலே’ நவம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதன் இயக்குனர் சாரங் தியாகு; உதவி இயக்குனராக கவுதம் வாசுதேவ் மேனன்; இசை: சித்துகுமார்.

சாரங் தியாகு கூறியதாவது, “இது ரொமான்டிக் படம். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாடலில் இருந்து ஒரு வார்த்தையை தலைப்பாக எடுத்துள்ளேன். கதையில் ஒரு பள்ளி மாணவரிலிருந்து இளைஞர் வரை நடக்கும் காதல் சம்பவங்களை மட்டுமே காட்டியுள்ளோம்.

நடிப்புக்கு அனைவரையும் ஆடிஷன் நடத்தி தேர்வு செய்தோம். ஆனால் ஹீரோவாக கிஷன் தாஸை மனதில் வைத்தே கதை எழுதப்பட்டது. கதையில் கிஷன் தாஸ் சினிமா வசனங்களைப் பேசி காதலிக்க முயற்சிப்பார், நாயகி ஷிவாத்மிகா பொறுப்பான ஒருவரை காதலிக்க வேண்டும் என எண்ணும் கதை.

இவர்கள் காதலும், அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளும் கதை மையமாகும். படம் முடிந்ததும் நடிகர் சிம்பு பார்த்தார். சில மாற்றங்களைச் சொல்லி அதைச் சேர்த்தோம். இதனால் படம் இன்னும் சிறப்பாக மாறியது. ரசிகர்கள் இதைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார் சாரங் தியாகு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...