ஆசியக் கோப்பை விவகாரம்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் தடை; சூரியகுமாருக்கு அபராதம்
செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்களின் நடத்தை கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சி எழுப்பியது. இதனை ஐசிசி விசாரணை செய்து, தண்டனைகள் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் 4 தகுதியிழப்புப் புள்ளிகளுடன் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் 2 தகுதியிழப்புப் புள்ளிகளுடன், சம்பளத்தில் 30% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பும்ராவுக்கு ஒரு தகுதியிழப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்த போதும், இரு அணிகளின் ஆட்டநடத்தை மற்றும் விளையாட்டு நாகரிகம் சரியான நிலைமையில் இல்லை என உலக கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
ஐசிசி அதிகாரபூர்வ அறிக்கையின் படி:
- ஹாரிஸ் ராவுஃப்: 2 ஒருநாள் போட்டிகளில் தடை + 30% அபராதம்
- சூரியகுமார் யாதவ்: 2 தகுதியிழப்புப் புள்ளிகள் + 30% சம்பள அபராதம்
- பும்ரா: 1 தகுதியிழப்புப் புள்ளி
இதன்படி ஹாரிஸ் ராவுஃப் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை; மூன்றாவது ஆட்டத்தில்தான் அவர் மீண்டும் விளையாட இயலும்.