இந்தி சினிமாவில் மெதுவாகவே செயல்படுகிறார்கள் – தென்னிந்திய திரைப்படத்துறையைப் பாராட்டும் ஷ்ரத்தா தாஸ்
பிரபல இந்தி நடிகை மற்றும் தெலுங்குத் திரைப்படத்திலும் பணியாற்றி வரும் ஷ்ரத்தா தாஸ், தென்னிந்திய சினிமாவின் பணியின் வேகம், தொழில் நுட்பம் மற்றும் ரசிகர்கள் பற்றிய பாராட்டுக்களை பகிர்ந்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறுகையில்:
“தென்னிந்திய திரைத்துறையில், பணம் கொடுத்து பப்ளிசிட்டி செய்யும் கலாசாரம் இல்லை. அவர்கள் முழுக்க முழுக்க வேலையில் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு படத்தில் நடிகரின் கதாபாத்திரம் சிறியது என்றாலும் ரசிகர்கள் காட்டும் அன்பு அளவிட முடியாதது. ரசிகர்கள் உங்கள் படத்தைக் காண பல மைல்கள் பயணிப்பார்கள் — இது மிகப் பெரிய விஷயம்,” என்றார்.
மேலும்,
“அங்கு ஒரு படத்திற்கு ஒப்பந்தம் வைப்பதும், அதன் படப்பிடிப்பும் மற்ற செயல்பாடுகளும் மிகவும் வேகமாக நடக்கிறது. சில நேரங்களில் படக்குழுவைச் சந்திக்காமலேயே தொலைபேசி அழைப்பில் படங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறேன். ஆனால் இந்தி சினிமாவில் எல்லாமே மிகவும் மெதுவாக நடக்கிறது,” என ஷ்ரத்தா தாஸ் தெரிவித்தார்.