அலியா பட் நடிக்கும் ‘ஆல்ஃபா’ திரைப்பட வெளியீட்டு தேதி மாற்றம்
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் யுனிவர்ஸ் படங்களில், முதல் முறையாக பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஆல்ஃபா’. இதில் அலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முதலில் இந்த படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான ‘வார் 2’ படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், ‘ஆல்ஃபா’ படத்தின் பணிகளில் மேலும் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நீடித்து வருவதால், படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இப்போதுவரை படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ‘ஆல்ஃபா’ படத்தை ஷிவ் ராவ் இயக்குகிறார்.