‘சூர்யா 47’ படத்துக்காக எர்ணாகுளத்தில் போலீஸ் ஸ்டேஷன் செட்
நடிகர் சூர்யா தற்போது பல படங்களில் பிஸியாக உள்ளார். அவர் நடித்த ‘கருப்பு’ படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருந்த இந்தப் படம், கிராபிக்ஸ் பணிகள் நீள்ந்ததால் அடுத்த ஆண்டு வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சூர்யா நடித்து வரும் 46-வது படம் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் மமிதா பைஜு, ரவீணா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
அதன்பின், சூர்யா நடிக்கும் 47-வது படம் மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகிறது. இவர் இயக்கிய ‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
குற்றப்புலனாய்வு த்ரில்லர் வகைச் சேர்ந்த இந்தப் படத்தில், சூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா நஸீம் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்தப் படத்திற்காக எர்ணாகுளம் அருகே பிரம்மாண்ட போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.