“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியற்றவை” – பிரகாஷ் ராஜ் விமர்சனம்
55வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘பிரம்மயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டி சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விழாவில் நடுவர் குழு தலைவர் பிரகாஷ் ராஜ், தேசிய விருதுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:
“தேசிய திரைப்பட விருதுகள் சமரசம் செய்யப்பட்டவை என்பதை தெளிவாகச் சொல்கிறேன். கேரளாவில் நடுவர் குழு தலைவராக இருப்பதில் பெருமை. என்னை அழைத்தபோது, ‘வெளிப்புற அனுபவம் உள்ள ஒருவரை விரும்புகிறோம், நாங்கள் தலையிடமாட்டோம்’ என்று சொன்னார்கள். ஆனால் தேசிய விருதுகளில் அது நடைபெறாது. ‘ஃபைல்கள்’வும், குப்பைகளும் விருது பெறும் நிலை உள்ளது. அப்படி ஒரு முறையால் வழங்கப்படும் தேசிய விருதுகள், மம்மூட்டிக்கு வழங்கும் அளவுக்கு லாயக்கில்லை.”
நடுவர் குழுவில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப், சந்தோஷ் எச்சிக்கானம், காயத்ரி அசோகன், நிதின் லுகோஸ், பாக்யலட்சுமி உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.