‘ஹக்’ படத்துக்கு ஷா பானுவின் மகள் வழக்கு — பின்னணி என்ன?
முஸ்லிம் பெண்கள் விவாகரத்து விவகாரம் குறித்தும், ஷா பானு வழக்கை அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘ஹக்’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்கும் கோரிக்கையுடன் ஷா பானுவின் மகள் பானு பேகம் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
1980களில் நாடு முழுவதும் பெரும் அரசியல் சர்ச்சைக்கு காரணமான ஷா பானு வழக்கில், விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஷரீயத் சட்டத்திற்கு எதிரானது என்கிற குற்றச்சாட்டுகளால் அப்போது நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வழக்கை மையமாகக் கொண்டு ஜங்லீ பிலிம்ஸ் நிறுவனம் ‘ஹக்’ (Haq) என்ற இந்தி படம் தயாரித்துள்ளது. இந்த படத்தை வெளியிட வேண்டாம் என மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், இந்தூர் அமர்வில் பானு பேகம் மனு தாக்கல் செய்துள்ளார்.
விசாரணை நடைபெற்றபோது, மனுதாரர் தரப்பு,
- திரைப்படம் ஷா பானுவின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்து செய்கிறது
- ஆனால் குடும்பத்தின் அனுமதி பெறப்படவில்லை
என்று வாதிட்டது.
மறுபுறம் தயாரிப்பாளர்கள்,
- படம் கற்பனை கதை
- ஷா பானுவின் குடும்ப அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை
என்று தெரிவித்தனர்.
இம்ரான் ஹாஷ்மி, யாமி கௌதம் நடிப்பில் உருவான ‘ஹக்’ படம் நவம்பர் 7 அன்று வெளியாக உள்ளது