தெலங்கானா விபத்து காரணமாக நாக சைதன்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே பேருந்து–லாரி நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்தனர். இந்த துயரமான விபத்து மாநிலம் முழுவதும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, அதனை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
‘விருபாக்ஷா’ இயக்குநர் கார்த்திக் வர்மா இயக்கும் இந்த த்ரில்லர் படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். லக்ஷயா என்ற தொல்லியல் ஆய்வாளர் கதாப்பாத்திரத்தில் அவர் தோன்றுகிறார். பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்