ரஞ்சி போட்டியில் விதர்பா அணி உறுதியான நிலை — தமிழ்­கத்தை நோக்கி ரன் குவிப்பு

Date:

ரஞ்சி போட்டியில் விதர்பா அணி உறுதியான நிலை — தமிழ்­கத்தை நோக்கி ரன் குவிப்பு

கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி லீக் ஆட்டத்தில், தமிழகத்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்த தமிழக அணி, நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித் (94), ஷாருக் கான் (0) ஆகியோர் இணைந்து தொடங்கியது. இதில் இந்திரஜித் 96 ரன்களில் அவுட் ஆக, ஷாருக் கான் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், முகமது அலி 14 ரன்கள் எடுத்தார். பிற வீரர்கள் குறிப்பிடத்தகுந்த ரன்கள் எடுக்காமல் வெளியேறினர். தமிழக அணி 107.1 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து விளையாடிய விதர்பா அணி, ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் அமன் மோகடே 80 ரன்களும், சத்யம் போயார் 11 ரன்களும் எடுத்தனர். தற்போது துருவ் ஷோரே 80 ரன்களுடன், ரவிகுமார் சமர்த் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

விதர்பா அணி, முதல் இன்னிங்ஸில் தமிழகத்தை முந்தும் நிலைக்கு வேகமாக முன்னேறி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை சுருட்டியது இந்தியா – 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை சுருட்டியது இந்தியா - 152 ரன்கள்...

டிஜிட்டல் உலகில் சரித்திரம்: இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 10 கோடி...

“இந்த முறை தாக்குதல் எல்லையைத் தாண்டும்”: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ கமாண்டர் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

"இந்த முறை தாக்குதல் எல்லையைத் தாண்டும்": பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ கமாண்டர்...

டி20 உலகக்கோப்பை 2026: வருண் சக்கரவர்த்தியின் சுழலில் சிக்கிய ஜிம்பாப்வே – இந்திய அணி அபார வெற்றியை நோக்கி!

டி20 உலகக்கோப்பை 2026: வருண் சக்கரவர்த்தியின் சுழலில் சிக்கிய ஜிம்பாப்வே -...