நவம்பர் 16-ல் ராஜமவுலி–மகேஷ் பாபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது?

Date:

நவம்பர் 16-ல் ராஜமவுலி–மகேஷ் பாபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது?

ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படத்தின் விளம்பரப்பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்கப் பிரசாரம் ‘எக்ஸ்’ தளத்தில் நகைச்சுவையான உரையாடலாக இடம்பெற்றது. இப்படத்தில் மகேஷ் பாபு, ராஜமவுலி, பிரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பெரும் படைப்பு இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு, நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட விவரங்களை இதுவரை படக்குழு ரகசியமாகவே வைத்திருக்கிறது. நவம்பர் மாதத்தில் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது.

பல மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதால், ஃபர்ஸ்ட் லுக்கும் அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் வகையில் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்புக்கு ஜியோ-ஹாட்ஸ்டார் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

குன்றத்தூர் முருகன் கோயிலில் மாசிமகத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்!

குன்றத்தூர் முருகன் கோயிலில் மாசிமகத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து...

“அறிவாலயம் காமவெறி பிடித்த மிருகங்களை வளர்க்கும் கூடாரமாகிவிட்டது” – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

"அறிவாலயம் காமவெறி பிடித்த மிருகங்களை வளர்க்கும் கூடாரமாகிவிட்டது" - நயினார் நாகேந்திரன்...

நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள கனடா பிரதமர்: மோடியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள கனடா பிரதமர்: மோடியுடன்...

பென்டகனின் நிபந்தனையை நிராகரித்த ஆந்த்ரோபிக்: ராணுவப் பயன்பாட்டிற்கு ‘கிளாட் ஏஐ’ வழங்க மறுப்பு!

பென்டகனின் நிபந்தனையை நிராகரித்த ஆந்த்ரோபிக்: ராணுவப் பயன்பாட்டிற்கு ‘கிளாட் ஏஐ’ வழங்க...