“ஈர்த்துவிட்ட தருணம்” – இந்திய மகளிர் அணியை ரஜினிகாந்த் பாராட்டினார்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்றுச் சாதனைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்தும் தனது எக்ஸ் தளத்தில் இந்திய மகளிர் அணியை வாழ்த்தினார். அவர் பதிவிடுகையில்:
“இந்தியாவுக்கு இது மிக அற்புதமான ஒரு தருணம். நமது மகளிர் அணி தங்களது தைரியத்தால், தீர்மானத்தால், அசைக்க முடியாத மன உறுதியால் முழு உலகத்துக்கும் இந்தியாவின் மூவர்ணத்தை உயர்த்தி காட்டியுள்ளனர். இது வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய ஊக்கமாகும். அணி முழுவதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று இந்தியா வரலாறு எழுதியுள்ளது. ஜெய் ஹிந்த்!”
என்று குறிப்பிட்டுள்ளார்