பிஎஸ்ஏ ஸ்குவாஷ் தொடர் – கால் இறுதியில் அனஹத் சிங் தோல்வி
போஸ்டன்:
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீராங்கனை அனஹத் சிங் கால் இறுதியில் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில், உலக தரவரிசையில் 45வது இடத்தில் உள்ள அனஹத் சிங், எகிப்தின் ஜனாஸ்வாஃபியை எதிர்கொண்டார். கடுமையான போட்டியின்போது அனஹத் சிங் 4-11, 9-11, 11-6, 11-3, 5-11 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
இதன் மூலம் அனஹத் சிங்கின் பிரயாணம் கால் இறுதியில் நிறைவடைந்தது.